Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
சப்பாத்திக்கு தக்காளி சேர்க்காமல் காலிஃப்ளவர் மசாலாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Cauliflower Masala Without Tomato Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் அந்த காலிஃப்ளவரைக் கொண்டு மசாலா செய்யுங்கள். ஆனால் உங்கள் வீட்டில் தக்காளி இல்லையா? கவலைப்பட வேண்டாம்.
ஏனெனில் இந்த மசாலாவிற்கு தக்காளி சேர்க்க தேவையில்லை. மேலும் இந்த மசாலா சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தக்காளி சேர்க்காமல் காலிஃப்ளவர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி சேர்க்காமல் எப்படி எளிய முறையில் காலிஃப்ளவர் மசாலா செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 2 1/2 கப்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2-3 (நீளமாக கீறியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* தயிர் - 1/4 கப்
* முந்திரி - 5-6
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* பால் - 2-3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 - 2 1/2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து 2 1/2 கப் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க
வைக்க வேண்டும். நீர் நன்கு கொதித்ததும், அதில் காலிஃப்ளவரை சேர்த்து,
அத்துடன் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து
3-4 நிமிடம் மூடி வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, காலிஃப்ளவரை
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் முந்திரியைப் போட்டு, பால் சேர்த்து நன்கு
பேஸ்ட் செய்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய்
மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும். அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி, எண்ணெய் பிரியும் வரை
கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் 1 கப் நீரை ஊற்றி, மிதமான தீயில்
வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் காலிஃப்ளவரை சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் வேக வைக்க
வேண்டும்.
* பின் முந்திரி பேஸ்ட்டை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை
சாற்றினை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் மசாலா
தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications