Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
காலிஃப்ளவர் வெச்சு.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. மட்டன் சைடு டிஷ்ஷே தோத்துடும்..
Cauliflower Masala For Chapati In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒவ்வொரு நாளும் சைடு டிஷ்ஷை முடிவு செய்வது பெரிய வேலையாக உள்ளதா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் இன்று அந்த காலிஃப்ளவர் வெச்சு மசாலா செய்யுங்கள்.
இந்த காலிஃப்ளவர் மசாலா சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி காலிஃப்ளவர் மசாலாவை செய்யும் போது, மட்டன் மசாலாவே தோற்றுப் போய்விடும். அந்த அளவில் இது சுவையாக இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 1
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* கிராம்பு - 4
* பட்டை - 2 சிறிய துண்டு
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 1 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 5
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் நீரை ஊற்றி, அதில்
துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவரை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்
மற்றும் உப்பு சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து, 4 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்3 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சோம்பு, பூண்டு, இஞ்சி, கிராம்பு, பட்டை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கி,
தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1 டீஸ்பூன் உப்பு, சீரகம், மிளகு, மல்லி சேர்த்து,
தக்காளி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி, முந்திரி சேர்த்து கிளறி
குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் சேர்த்து, மென்மையாகும்
வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பாதி வெங்காயத்தை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கி, சிறிது நீரை
ஊற்றி கிளறி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி 2
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் காலிஃப்ளவரை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து,
வேண்டுமானால் சிறிது உப்பு தூவி கிளறி, கரம் மசாலாவை சேர்த்து கிளறி,
மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து, 10 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான காலிஃப்ளவர் மசாலா
தயார்.



Click it and Unblock the Notifications











