Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
செஃப் வெங்கடேஷ் பட்டின் ஸ்பெஷல் ரெசிபியான காலிஃப்ளவர் மல்லி ப்ரையை எப்படி செய்யணும் தெரியுமா?
Cauliflower Malligae Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது ஏதாவது சூடாகவும், காரசாரமாகவும் சாப்பிட விரும்புவீர்களா? எப்போதும் மாலையில் பஜ்ஜி, போண்டா, வடை என்று தான் செய்வீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா?
அப்படியானால் அந்த காலிஃப்ளவரைக் கொண்டு செஃப் வெங்கடேஷ் பட் டின் சிக்னேச்சர் ரெசிபியான காலிஃப்ளவர் கொத்தமல்லியை செய்யுங்கள். இந்த காலிப்ளவர் மல்லிகே மாலை வேளையில் சாப்பிட ஏற்ற அருமையான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு செஃப் வெங்கடேஷ் பட்டின் ஸ்பெஷல் ரெசிபியான காலிஃப்ளவர் மல்லி ப்ரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் வெங்கடேஷ் பட்டின் ஸ்பெஷல் ரெசிபியான காலிஃப்ளவர் ப்ரை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 1 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 3/4 டீஸ்பூன்
* சோள மாவு - 3/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
அரைப்பதற்கு...
* கொத்தமல்லி - 1/2 கட்டு
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 4 பல்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு
கொதிக்க ஆரம்பித்ததும், அதை இறக்கி துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவரைப்
போட்டு 2 நிமிடம் ஊற வைத்து, பின் காலிஃப்ளவரை எடுத்து தனியாக ஒரு
பாத்திரத்தில் போட்டுப் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் கொத்தமல்லி, பூண்டு, பச்சை மிளகாய்
ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு காலிப்ளவருடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு,
சுவைக்கேற்ப உப்பு, அரைத்த கொத்தமல்லி விழுது, சோள மாவு, கடலை மாவு
சேர்த்து நன்கு பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள காலிஃப்ளவரைப்
போட்டு, பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், சுவையான காலிப்ளவர்
மல்லிகே அல்லது காலிப்ளவர் கொத்தமல்லி தயார்.
Image Courtesy: jeyashriskitchen



Click it and Unblock the Notifications