Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
சப்பாத்திக்கு ஒருடைம் காலிஃப்ளவர் கீமா மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க
Cauliflower Kheema Masala Recipe In Tamil: நைட் உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திற்கு க்ரீமியான ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு காலிஃப்ளவர் கீமா மசாலாவை செய்யுங்கள்.
இப்படி காலிஃப்ளவரை செய்யும் போது, பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாகவும் சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த கீமா மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். வேலை முடிந்து வீட்டிற்கு வருபவர்கள் டக்கென்று செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் கீமா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் கீமா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* பட்டை - 1 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு - 2
* பிரியாணி இலை - 1
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* காலிஃப்ளவர் - 1
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* வெண்ணெய் - 1 ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு, 5
நிமிடம் ஊற வைத்து, பின் அதை எடுத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாசிப்பூ, கிராம்பு, பிரியாணி
இலை, சீரகம், மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து, உப்பு தூவி நன்கு நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து, அத்துடன்
மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி கிளறி,
மூடி வைத்து 5-7 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் வெண்ணெயை சேர்த்து,
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் கீமா
மசாலா தயார்.



Click it and Unblock the Notifications