Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
1 கப் கடலையும், காலிஃப்ளவரும் இருந்தா இந்த சூப்பரான மசாலாவை செய்யுங்க...தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்!
Cauliflower Kadalai Masala Recipe in Tamil: சப்பாத்திக்கு, பூரிக்கு உருளைக்கிழங்கு குருமா செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் மற்றும் நிலக்கடலை உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் வைத்து அட்டகாசமான ஒரு மசாலா செய்யலாம். இந்த காலிஃப்ளவர் கடலை மசாலா இதுவரை நீங்கள் சாப்பிடாத ஒரு சுவையை உங்களுக்கு வழங்கக்கூடும்.
இந்த காலிஃப்ளவர் கடலை மசாலா சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி காலிஃப்ளவர் மசாலாவை செய்யும் போது, மட்டன் மசாலாவே தோற்றுப் போய்விடும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் கடலை மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் கடலை மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- பெரிய காலிஃப்ளவர் - ஒன்று
- பெரிய வெங்காயம் - 4
- தக்காளி - 3
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- கடுகு - கால் ஸ்பூன்,
- உளுந்து - கால் ஸ்பூன்
- தட்டிய பூண்டு - 4
- கடலைப்பருப்பு - அரை ஸ்பூன்
அரைப்பதற்கு:
- தேங்காய் - கால் மூடி
- நிலக்கடலை - 2 கைப்பிடி
- தனியா - 2 ஸ்பூன்
- மிளகு - அரை ஸ்பூன்
- வர மிளகாய் - 6
- பூண்டு - 10 பல்
- பட்டை - ஒரு துண்டு
- கிராம்பு - 4
செய்முறை:
- அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் தேங்காய், பூண்டு தவிர அனைத்தையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.
- பின்னர் நிலக்கடலையை தோல் நீக்கி, தேங்காய் மற்றும் பூண்டுடன் வறுத்து வைத்த பொருட்களை சிறிதளவு நீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை நீளமாகவும், தக்காளியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- காலிஃப்ளவரில் நன்றாக சுத்தம் செய்து வெந்நீரில் 5 நிமிடம் வைக்கவும்.
- அரைப்பதற்கு கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் தட்டி வைத்த பூண்டை போட்டு தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கின வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்
- பின்னர் அதில் அரைத்த விழுது, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.
- எண்ணெய் பிரிந்து வந்ததும் காலிஃப்ளவரை சேர்த்து கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
- கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான காலிஃப்ளவர் கடலை மசாலா தயார்.
- இது தோசை, சப்பாத்திக்கு மட்டுமின்றி சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications