Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்... காலிஃப்ளவர் பச்சை பட்டாணி சப்ஜி
இன்று இரவு உங்கள் வீட்டில் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் சப்பாத்தி செய்ய நினைத்தால், அதற்கு அட்டகாசமான சுவையைக் கொண்ட காலிஃப்ளவர் பச்சை பட்டாணி சப்ஜி செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் சப்பாத்தி செய்ய நினைத்தால், அதற்கு அட்டகாசமான சுவையைக் கொண்ட காலிஃப்ளவர் பச்சை பட்டாணி சப்ஜி செய்யுங்கள். இந்த சப்ஜி செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இது வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்ததும் சீக்கிரம் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டது. மேலும் பேச்சுலர்கள் கூட இந்த சப்ஜியை முயற்சிக்கலாம். இந்த சப்ஜி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் பச்சை பட்டாணி சப்ஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் பச்சை பட்டாணி சப்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 1 கப்
* பச்சை பட்டாணி - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, பின் காலிஃப்ளவரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளியை சேர்த்து, மஞ்சள் தூள் தூவி, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் வேக வைத்துள்ள காலிஃப்ளவர் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் பச்சை பட்டாணி சப்ஜி தயார்.



Click it and Unblock the Notifications