Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
காலிஃப்ளவர் வெச்சு ஒருவாட்டி இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்...
Cauliflower Gravy Recipe In Tamil: மதிய வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வாய்க்கு ருசியான சமையலை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் அந்த காலிஃப்ளவர் கொண்டு கிரேவி செய்யுங்கள்.
இந்த கிரேவி நல்ல சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருப்பதோடு, சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி மட்டன் சுவையை தோற்கடிக்கும் வகையில் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* கல் உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* பூண்டு - 10
* இஞ்சி - 4 சிறிய துண்டு
* தக்காளி - 2 (நறுக்கியது)
* முந்திரி - 10
* தண்ணீர் - சிறிது
கிரேவிக்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* நற்பதமான பச்சை பட்டாணி - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் சிறிது
மஞ்சள் தூள், கல் உப்பு ஆகியவற்றை சேர்த்து, காலிஃப்ளவர் மூழ்கும் வரை
நல்ல சூடான நீரை ஊற்றி 3-4 நிமிடம் ஊற வைத்து, பின் நீரை
வடிகட்டிவிட்டு, மீண்டும் ஒருமுறை நீரில் அலசி வடிகட்டிவிட்டு,
காலிஃப்ளவரை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், காலிஃப்ளவரை சேர்த்து, 1/4 டீஸ்பூன் மிளகாய் தூளை
சேர்த்து நன்கு கிளறி 3-4 நிமிடம் வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து, அத்துடன் முந்திரியையும் சேர்த்து
நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின் பொடியாக
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் குழம்பு மிளகாய் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா
சேர்த்து 1 நிமிடம் கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி,
பச்சை பட்டாணி இருந்தால், அவற்றையும் சேர்த்து, தேவையான அளவு நீரை
ஊற்றி, காலிஃப்ளவரையும் சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
மூடி வைத்து நன்கு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான
காலிஃப்ளவர் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications











