Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
சப்பாதிக்கு காலிஃப்ளவரை இப்படி கிரேவி செய்யுங்க.. கறிக்குழம்பே தோத்துடும்.. அவ்வளவு ருசியா இருக்கும்..
Cauliflower Gravy Recipe In Tamil: இரவு உங்கள் வீட்டில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் தான் செய்வீர்களா? காலிஃப்ளவரை சைடு டிஷ் செய்வதாக இருந்தாலும், ஒரே சுவையில் தான் செய்வீர்களா?
அப்படியானால் ஒருமுறை காலிஃப்ளவரை இந்த பக்குவத்தில் கிரேவி செய்யுங்கள். கறிக்குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ருசியாக இருக்கும். மேலும் இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை இப்படி காலிஃப்ளவர் கிரேவி செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள்.

உங்களுக்கு காலிஃப்ளவர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 1
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* முந்திரி - 10
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி, கொதிக்கும் நீரில்
உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதில் துண்டுகளாக்கப்பட்ட
காலிஃப்ளவரை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய தக்காளி, பூண்டு இஞ்சி, முந்திரி சேர்த்து
நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரிய
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் காலிஃப்ளவரை சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் மஞ்சள்
தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி,
2 கப் நீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து
கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து கொத்தமல்லி மற்றும்
சர்க்கரையை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications