Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
காலிஃப்ளவர் முட்டை சப்ஜி
சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் காலிஃப்ளவர் மற்றும் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு சப்ஜி செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் காலிஃப்ளவர் மற்றும் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு சப்ஜி செய்யுங்கள். இந்த சப்ஜி மிகவும் ஆரோக்கியமானது மட்டுமின்றி, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் முட்டை சப்ஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் முட்டை சப்ஜியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 2 கப் (சுத்தம் செய்து நறுக்கியது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* முட்டை - 3
செய்முறை:
* முதலில் சுத்தம் செய்து வைத்துள்ள காலிஃப்ளவரை சுடுநீரில் போட்டு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு காலிஃப்ளவரை போட்டு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டு மூடி வைத்து, சிறிது நேரம் காலிஃப்ளவரை வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு தக்காளி வேகும் வரை வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் முட்டை சப்ஜி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications