Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
3 முட்டை இருந்தா காலிஃபிளவருடன் சேர்த்து இந்த மாதிரி ப்ரை பண்ணுங்க... சூப்பரான சைடிஷா இருக்கும்...!
Cauliflower Egg Fry Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்று யோசிப்பது கடினமானதாக இருந்தால் அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பது அதைவிட கடினமாகும். ஏனெனில் சாம்பார், புளிக்குழம்பு, குருமா என ஏதாவது ஒரு குழம்பை செய்து விடலாம் ஆனால் அதற்கு பொருத்தமான சைடிஷ் செய்ய அதிக நேரம் யோசிக்க வேண்டியிருக்கும். பொதுவாக அனைவருக்கும் பிடித்த காய்கறிகள் என்று சில காய்கறிகள் உண்டு.
அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் காலிஃபிளவர் மிகவும் முக்கியமானதாகும். காலிஃபிளவர் சுவையான காய்கறி மட்டுமல்ல ஆரோக்கியமான காய்கறியும் கூட. காலிஃபிளவரை சில்லி, பொரியல், குருமா என பல வழிகளில் சமைக்கலாம். காலிஃபிளவர் அனைத்து விதமான காய்கறிகளுடனும் ஒத்துப்போகக் கூடிய காய்கறியாகும்.
அந்த வகையில் காலிஃபிளவரை, முட்டையுடன் சேர்த்து சூப்பரான சைடிஷ் செய்யலாம். இது அனைத்து வகையான சாதத்திற்கும், சப்பாத்திக்கும் பொருத்தமான சைடிஷாக இருக்கும். இந்த பதிவில் காலிஃபிளவரையும், முட்டையையும் வைத்து எப்படி அட்டகாசமான சைடிஷ் செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்:
- முட்டை - 3
- காலிஃபிளவர் - 1 அல்லது 1 கப்
- பெரிய வெங்காயம் - 2 அல்லது சின்ன வெங்காயம் - 20
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி - சிறு துண்டு
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- பூண்டு - 5 பல்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- மிளகாய்த்தூள் - ஒரு ஸ்பூன்
- மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- உப்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை:
- காலிஃபிளவரை நறுக்கி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவேண்டும். இதுதான் மிகவும் முக்கியமானதாகும்.
- சுத்தம் செய்த காலிஃபிளவருடன் மிளகாய்த் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- இஞ்சியை தோல் சீவி அதனுடன் பூண்டு, சோம்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- முட்டைகளை உடைத்து ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி, அதில் சிறிது மஞ்சள் தூள் போட்டு கரண்டியால் நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.
- எல்லாம் ரெடியானதும் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும், கறிவேப்பிலையையும் கொட்டிக் கிளறவும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பின்னர் முட்டையை ஊற்றி கரண்டியால் நன்றாக அடித்து வறுக்கவும்.
- முட்டை வெந்தவுடன் நன்கு கிளறிவிட்டு வேகவைத்துள்ள காலிஃபிளவரைக் கொட்டிக் கிளறவும். தண்ணீர் சுண்டிய பின், மிளகுத்தூள் தூவி நன்றாகக் கிளறி வாணலியை இறக்கினால் அட்டகாசமான காலிஃபிளவர் முட்டை பொடிமாஸ் ரெடி.



Click it and Unblock the Notifications