Latest Updates
-
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்..
காலிஃப்ளவர் இருந்தா ஒருடைம் இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சும்மா தாறுமாறா இருக்கும்..
Cauliflower Cutlet Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? காலிஃப்ளவர் இருந்தால், வீட்டில் ப்ரை செய்தோ அல்லது குருமாவாக செய்தோ தான் சாப்பிடுவீர்களா? அப்படியானால் அடுத்தமுறை காலிஃப்ளவர் வாங்கினால், அதைக் கொண்டு கட்லெட் கிரேவி செய்யுங்கள்.
இந்த காலிஃப்ளவர் கட்லெட் கிரேவி சப்பாத்தி, தோசை, இட்லி, பூரி, சாதம் என அனைத்துடனும் சாப்பிட அருமையாக இருக்கும். இந்த கிரேவி செய்வதற்கு சற்று நேரம் எடுத்தாலும், சுவை மிகவும் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் கட்லெட் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் கட்லெட் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 1
* உப்பு - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சுடுநீர்
அரைப்பதற்கு...
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 5
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 1
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 2
கட்லெட்டிற்கு...
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கிரேவிக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* நன்கு கனிந்த தக்காளி - 2 (அரைத்தது)
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சுடுநீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து,
காலிஃப்ளவர் பூக்களை மட்டும் வெட்டிப் போட்டு, 3 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் சோம்பு, சீரகம், கிராம்பு, அன்னாசிப்பூ,
பிரியாணி இலை, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து
அரைத்து, தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே ஜாரில் ஊற வைத்த காலிஃப்ளவரை சேர்த்து லேசாக அரைத்து,
ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சிக்கன்
மசாலா, சுவைக்கேற்ப உப்பு, கரம் மசாலா, கொத்தமல்லி சேர்த்து கைகளால்
நன்கு பிசைந்து விட வேண்டும்.
* பிறகு அதில் கடலை மாவு சேர்த்து, தண்ணீர் எதுவும் சேர்க்காமல்
கைகளால் நன்கு பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கட்லெட் வடிவில்
தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளை சேர்த்து முன்னும்
பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா,
சிக்கன் மசாலா சேர்த்து, பச்சை வாசனை போக 3-4 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, 5 நிமிடம் மூடி வைத்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க
வேண்டும்.
* அடுத்து அதில் ப்ரை செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை சேர்த்து, மூடி
வைத்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான காலிஃப்ளவர் கட்லெட் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications