Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
சப்பாத்திக்கு காலிஃப்ளவரை ஒரு டைம் இப்படி கிரேவி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Cauliflower Curry Recipe In Tamil: நைட் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் அந்த காலிஃப்ளவரைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கிரேவி செய்யுங்கள்.
அதுவும் வழக்கமாக செய்வது போன்று கிரேவி செய்யாமல், மசாலா அரைத்து கிரேவி செய்யுங்கள். இதனால் ருசி இன்னும் அற்புதமாக இருக்கும். இந்த காலிஃப்ளவர் கிரேவி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, நாண், தோசை போன்றவற்றுடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவரை கழுவ...
* காலிஃப்ளவர் - 300 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு
மசாலாவிற்கு...
* முந்திரி - 5
* மல்லி விதை - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 3
* எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 1
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* தக்காளி - 2
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
கிரேவிக்கு..
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - கிரேவிக்கு தேவையான அளவு
* தயிர் - 2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து, அதை ஒரு பாத்திரத்தில்
எடுத்து, அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் காலிஃப்ளவர் மூழ்கும்
அளவில் சுடுநீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைத்து, பின் அதை ஒரு தட்டில்
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் முந்திரி, மல்லி, மிளகு,
சீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, எள்ளு, பட்டை சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்கி, பின் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதே பேனை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், காலிஃப்ளவரை சேர்த்து 3-4 நிமிடம் வதக்கி
இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த மசாலா பொருட்களை சேர்த்து நன்கு பொடி
செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் வதக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து காலிஃப்ளவரை சேர்த்து மசாலா நன்கு ஒன்று சேரும் வரை கிளறி,
கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்ததும், அதில் தயிரை சேர்த்து 1 நிமிடம் கிளறி,
பின் கொத்தமல்லியைத் தூவியை கிளறி இறக்கினால், சுவையான காலிஃப்ளவர்
கிரேவி தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications











