Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
காலிஃப்ளவர் தேங்காய் பால் கறி
Cauliflower Coconut Milk Curry: உங்கள் வீட்டில் உள்ளோர் காலிஃப்ளவரை விரும்பி சாப்பிடுவார்களா? நீங்கள் உங்கள் வீட்டில் அடிக்கடி காலிஃப்ளவரை வாங்கி சமைப்பீர்களா? அப்படியானால் எப்போதும் ஒரே மாதிரி காலிஃப்ளவரை சமைத்து சாப்பிடாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமாகவும் சமைத்து சாப்பிடுங்கள்.
நீங்கள் காலிஃப்ளவரைக் கொண்டு சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஒரு சைடு டிஷ் செய்ய விரும்பினால், காலிஃப்ளவர் தேங்காய் பால் கறி செய்யுங்கள். இந்த காலிஃப்ளவர் தேங்காய் பால் கறி செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் தேங்காய் பால் கறி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் தேங்காய் பால் கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை குடைமிளகாய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* தேங்காய் பால் - 200 மிலி
* தயிர் - 1 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச்
* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், கடலை மாவு, தேங்காய் பால்,
துருவிய இஞ்சி, மல்லித் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 கப் நீரை ஊற்றி நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு காலிஃப்ளவரை துண்டுகளாக்கி, அதை கொதிக்கும் நீரில் போட்டு,
சிறிது உப்பு தூவி கிளறி, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் குடைமிளகாய் மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து சிறிது நேரம்
வதக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், அதில் கலந்து வைத்துள்ள தேங்காய் பால்
கலவையை ஊற்றி கிளறி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்க
வேண்டும்.
* கறி மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி 2 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் தேங்காய் பால் கறி
தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications