Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
காலிஃப்ளவர் கொண்டைக்கடலை மசாலா
காலிஃப்ளவர் கொண்டைக்கடலை மசாலா சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் மற்றும் கொண்டைக்கடலை உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு அட்டகாசமான ஒரு மசாலா செய்யலாம். இந்த காலிஃப்ளவர் கொண்டைக்கடலை மசாலா சப்பாத்தி, பூரி போன்றவற்றிற்கு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த மசாலா க்ரீமியாக இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது, இதை செய்து கொடுத்தால் அவர்களின் பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு காலிஃப்ளவர் கொண்டைக்கடலை மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் கொண்டைக்கடலை மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா பொடிகள்...
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
வதக்குவதற்கு...
* வெங்காயம் - 1
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* காலிஃப்ளவர் - 1 கப்
* கொண்டைக்கடலை - 1 கப் (நீரில் 8 மணிநேரம் ஊற வைத்தது)
* தக்காளி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
* க்ரீம் - 1/3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் மசாலா பொடிகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கொண்டைக்கடலையை குக்கரில் போட்டு நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, சிறிது உப்பு சேர்த்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், காலிஃப்ளவரைப் போட்டு, சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, காலிஃப்ளவரை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பொடியாக வெட்டிக் கொள்ள வேண்டும் மற்றும் இஞ்சியை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மசாலா பொடிகளை சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளற வேண்டும். பின் அதில் காலிஃப்ளவரை சேர்த்து, 5 நிமிடம் காலிஃப்ளவருடன் மசாலா பொடிகள் சேரும் வரை கிளற வேண்டும்.
* பின் அதில் கொண்டைக்கடலை, தக்காளி சாஸ் மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவேளை மசாலா மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் சிறிது நீரை ஊற்றி கொள்ளவும்.
* 15 நிமிடம் கழித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, க்ரீமை சேர்த்து கிளறி, சுவைக்கு உப்பு வேண்டுமானால் சேர்த்து கிளறினால், சுவையான காலிஃப்ளவர் கொண்டைக்கடலை மசாலா தயார்.
Image Courtesy: budgetbytes



Click it and Unblock the Notifications