Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
ஒருவாட்டி காலிஃப்ளவர் 65 இப்படி செஞ்சு பாருங்க.. சும்மா வேற லெவல்-ல டக்கரா இருக்கும்..
Cauliflower 65 Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் மொறுமொறுவென்றும், சூடாகவும் ஏதாவது செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் அந்த காலிஃப்ளவரைக் கொண்டு 65 செய்து கொடுங்கள். ஆனால் நீங்கள் காலிஃப்ளவர் 65 செய்தால், மசாலா பிரிந்து வருமா?
இதனாலேயே அதை செய்வதில்லையா? இனி அந்த கவலை வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் மசாலா பொடிகளையும், பொருட்களையும் சேர்த்து பிசைந்து பொரித்து எடுங்கள். இப்படி செய்யும் போது மசாலா பிரியாமல் இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் 65 ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 1
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை - 1/2
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை மீடியம் சைஸில் துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை ஊற்றி, அதில் சிறிது உப்பு
மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, துண்டுகளாக்கி வைத்துள்ள காலிஃப்ளவரை
சேர்த்து, 10 நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 2 டேபிள்
ஸ்பூன் சோள மாவு, 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு மற்றும் தேவையான அளவு
உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா,
இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பாதி எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் காலிஃப்ளவரை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள காலிஃப்ளவரை
சேர்த்து பொன்னிறமாக ப்ரை செய்து எடுத்தால், காலிஃப்ளவர் 65
தயார்.



Click it and Unblock the Notifications