Latest Updates
-
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
அடுத்தமுறை காலிஃப்ளவர் 65 செய்யும் போது இந்த ஒரு பொருளையும் சேத்துக்கோங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Cauliflower 65 Recipe In Tamil: மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, மொறுமொறுவென்று ஏதாவது செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் காலிஃப்ளவர் 65 செய்து சாப்பிடுங்கள்.
அதுவும் நீங்கள் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், வீட்டில் உள்ள மசாலா பொடிகளைக் கொண்டு 65 செய்யுங்கள். இதனால் சுவை இன்னும் அலாதியாக இருக்கும். முக்கியமாக பிரட் தூளில் பிரட்டி பொரித்து எடுக்கும் போது, இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் 65 ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மிதமான அளவிலான காலிஃப்ளவர் - 1
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் துள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை - பாதி
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* பிரட் - 5 துண்டு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் கொதிக்கும் நீரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி,
பின் காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து
இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு,
மிளகாய் தூள், மல்லித் தூள், சோம்புத் தூள், மிளகுத் தூள், சீரகத்
தூள், கரம் மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு,
எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, லேசாக நீரைத்
தெளித்து, சற்று கெட்டியான பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டு நன்கு பிரட்டி, ஒரு 1/2
மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் பிரட் துண்டுகளைப் போட்டு அரைத்து பொடியாக்கி,
அதை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஊற வைத்துள்ள காலிஃப்ளவர் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து,
பிரட் தூளில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து மிதமான
தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான காலிஃப்ளவர் 65
தயார்.
Image Courtesy: Delish



Click it and Unblock the Notifications