Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
நாவூறும்... முந்திரி சிக்கன் சுக்கா - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க...
Cashew Chicken Sukka Recipe In Tamil: மழைக்காலமாக இருப்பதால் நன்கு காரசாரமாக சாப்பிட தோன்றும். அதுவும் இப்படியான சூழ்நிலையில் நிறைய பேர் தங்களின் வீட்டில் அடிக்கடி சிக்கனை வாங்கி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி சிக்கனை வாங்குவீர்களா? அப்படியானால் எப்போதும் செய்வது போன்று சிக்கனை சமைத்து சாப்பிடாமல், ஒருமுறை முந்திரி சிக்கன் சுக்காவை செய்து சாப்பிடுங்கள்.
இந்த சுக்காவை செய்து ரசம் சாதம், சாம்பா சாதம் போன்றவற்றுடன் சாப்பிட்டால் ருசி பிரமாதமாக இருக்கும். இந்த சுக்காவிற்கு நிறைய மசாலா தேவையில்லை, வெறும் 2 மசாலா இருந்தால் போதும். முக்கியமாக இந்த சுக்காவை பேச்சுலர்கள் கூட செய்யலாம்.

உங்களுக்கு முந்திரி சிக்கன் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முந்திரி சிக்கன் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 50 கிராம்
* பெரிய வெங்காயம் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 1
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் - 1 1/2 கிலோ
* கறி மசாலா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், முந்திரியை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும்
உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, கழுவி
வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும். இப்படி செய்யும் போது சிக்கனில் இருந்து நீர் வெளியேறும்,
அதே சமயம் சிக்கனும் ஓரளவு வெந்திருக்கும்.
* சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதில் கறி மசாலாவை சேர்த்து நன்கு
கிளறி, குறைவான தீயில் வைத்து, சிக்கனில் உள்ள நீர் வற்றி ட்ரை ஆகும்
வரை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்து சுக்கா போன்று வந்ததும், அதில் கொத்தமல்லியைத்
தூவி கிளறி இறக்கினால், சுவையான முந்திரி சிக்கன் சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications