Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
கேரட் அதிகமாக இருந்தா.. ஒருவாட்டி இந்த புதுமையான ஸ்வீட்டை ட்ரை பண்ணுங்க.. வேற லெவல்-ல இருக்கும்..
Carrot Delight Recipe In Tamil: உங்கள் பிள்ளைகள் மாலை வேளையில் வித்தியாசமாக ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் ஏதாவது செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் கேரட் அதிகமாக உள்ளதா? அப்படியானால் அந்த கேரட்டைக் கொண்டு வழக்கமாக செய்யும் அல்வாவை செய்யாமல், கேரட் டிலைட் என்னும் ஸ்வீட்டை செய்யுங்கள்.
இந்த கேரட் டிலைட் கண்களை பறிக்கும் வகையில் அழகாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். முக்கியமாக இந்த கேரட் டிலைட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கேரட் டிலைட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் டிலைட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 1/2 கிலோ
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* சர்க்கரை - 1/2 கப்
* சோள மாவு - 1/4 கப்
* சிவப்பு நிற ஃபுட் கலர் - 1/2 டீஸ்பூன்
* டெசிகேட்டட் தேங்காய் பவுடர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அவற்றை சிறு துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கேரட் துண்டுகளை சேர்த்து, அதில் 1/2
லிட்டர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, உயர் தீயில் வைத்து நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், மிதமான தீயில் வைத்து, கேரட்டை நன்கு
வேக வைக்க வேண்டும்.
* கேரட் நன்கு மென்மையாக வெந்ததும், அதை இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* கேரட் நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் அதில் 1/2 கப் சர்க்கரை மற்றும் 1/4 கப் சோள மாவை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் சிவப்பு நிற ஃபுட் கலரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்ததை ஊற்றி
தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* அப்படி தொடர்ந்து கிளறும் போது, கலவையானது நன்கு கெட்டியாகி, அல்வா
போன்ற பதத்திற்கு வரும்.
* பின் அடுப்பை அணைத்துவிட்டு, நன்கு முழுமையாக குளிர வைக்க
வேண்டும்.
* அதன் பின் கையில் நெய் தடவி, குளிர வைத்த கலவையை கொஞ்சமாக எடுத்து
நன்கு உருட்டி, பின் டெசிகேட்டட் தேங்காய் பவுடரில் பிரட்டி எடுக்க
வேண்டும்.
* இப்படி அனைத்து கலவையையும் உருட்டி, தேங்காய் பவுடரில் பிரட்டினால்,
சுவையான கேரட் டிலைட் தயார்.



Click it and Unblock the Notifications