கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்..

Posted By:

Carrot Rice With Kovakkai Varuval Recipe In Tamil: காலையில் ஸ்கூலுக்கு என்ன செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல சத்தான மதிய உணவை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் கேரட் சாதம் செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக கோவக்காய் வறுவலை செய்து கொடுங்கள். இந்த லன்ச் காம்போ மிகவும் அருமையாக இருக்கும். இதை செய்து கொடுத்தால், இதுவரை சாதத்தை மிச்சம் வைத்து வந்த உங்கள் பிள்ளைகளின் டிபன் பாக்ஸ் காலியாகத் தான் வரும். அந்த அளவில் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

Carrot Rice With Kovakkai Varuval How To Make This Lunchbox Combo

உங்களுக்கு இந்த கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் சாதம் மற்றும் கோவக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கேரட் சாதத்துக்கு..

* எண்ணெய் - 2-3 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 1
* முந்திரி - தேவையான அளவு
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சாம்பார் தூள் - 1/2 டீஸ்பூன்
* கேரட் - 2-3 (துருவியது)
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சாதம் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* நெய் - 1/2 டீஸ்பூன்

கோவக்காய் வறுவலுக்கு...

* எண்ணெய் - 2 1/2 டீஸ்பூன்
* கோவக்காய் - 300 கிராம் (வட்டமாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரியை சேர்த்து ப்ரை செய்து, கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சாம்பார் தூளை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய கேரட்டை சேர்த்து, நிறம் மாற வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி, சாதத்தை சேர்த்து, அத்துடன் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், கேரட் சாதம் தயார்.
* அடுத்து வறுவலுக்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 1/2 டீஸ்பூன் எஎண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய கோவக்காயை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து கோவக்காயை வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, மீண்டும் கிளறி விட்டு சிறிது நேரம் கோவக்காயை வேக வைக்க வேண்டும்.
* பின்பு மூடியைத் திறந்து, அதில் மிளகாய் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும். கோவக்காய் நன்கு நிறம் மாறி வெந்ததும், அதை இறக்கினால், சுவையான கோவக்காய் வறுவல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, October 8, 2026, 22:00 [IST]
Desktop Bottom Promotion