Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
1/4 கப் வேர்க்கடலையும், 1 கேரட்டும் இருந்தா இந்த சட்னியை அரைச்சு பாருங்க... எவ்வளவு இட்லி சுட்டாலும் பத்தாது..
Carrot Peanut Chutney Recipe in Tamil: உங்கள் வீட்டில் காலையில் இட்லி அல்லது தோசைதான் டிபனாக செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடிஷ் செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி, தோசைக்கு வித்தியாசமான சைடு டிஷ் செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா?
உங்கள் வீட்டில் கேரட் உள்ளதா? இதுவரை கேரட்டை வைத்து பொரியல், வறுவல் அல்லது சாம்பார்தான் செய்திருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு சட்னி செய்துள்ளீர்களா? இல்லையென்றால், இந்த சட்னியை உடனே ட்ரை செய்து பாருங்கள். அதுவும் கேரட்டுடன், வேர்க்கடவை சேர்த்து சட்னி செய்யுங்கள். இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். மேலும் இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு கோரட் வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் வேர்க்கடலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- 1 தோல் நீக்கிய கேரட்
- 1/4 கப் வறுத்த வேர்க்கடலை
- 1/4 கப் புதினா இலைகள்
- 2 ஸ்பூன் துருவிய தேங்காய்,
- 1 நறுக்கிய வெங்காயம்
- 1 ஸ்பூன் பூண்டு
- 3 நறுக்கிய பச்சை மிளகாய்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் எண்ணெய்
- அரை ஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் வேர்க்கடலையை ஒரு கடாயில் போட்டுட் தோல்கள் பொன்னிறமாக மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
- கடலையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஆற விடவும். வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கவும். இல்லையெனில் கடைகளில் விற்கும் வறுத்த வேர்க்கடலையையும் வாங்கலாம்.
- கடாயை மீண்டும் அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். பின்னர் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய பூண்டு சேர்த்து ஒன்றாக வதக்கவும்.
- பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும், பின்னர் நறுக்கிய கேரட் மற்றும் புதினா இலைகளை சேர்த்து வதக்கக்கவும். இதை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.
- இந்த கலவை ஆறியதும் கலவையை மிக்ஸி ஜாருக்கு மாற்றி வேர்க்கடலையுடன் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட் போல அரைக்கவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால் சுவையான கேரட் வேர்க்கடலை சட்னி ரெடி.
- தேவைப்பட்டால் கூடுதல் சுவைக்கு சட்னியை தாளித்து சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications