Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...!
Carrot Egg Fry Recipe in Tamil: அனைவருக்கும் பிடித்த அசைவ உணவுகளில் எப்போதும் முதலிடத்தில் இருப்பது முட்டைதான்? விலை குறைவான அதேசமயம் மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவென்றால் அது முட்டைதான். முட்டையில் போதுமான அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வாரத்திற்கு இரண்டு முறையாவது முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா?
எப்பொழுதும் முட்டையை வேக வைத்தோ, ஆம்லெட் போட்டோ, ஆப்பாயில் போட்டோ அல்லது வறுத்தோ சாப்பிடுகிறீர்களா? ஒரே மாதிரி முட்டை செய்து போராடிக்கிறதா? ஆம் எனில் நாங்கள் கூறும் இந்த வித்தியாசமான முறையில் கேரட் முட்டை பொரியலை செய்து பாருங்கள். முட்டையை இந்த மாதிரி பொரியல் செய்து கொடுத்தால் முட்டை சாப்பிடாதவர்கள் கூட அதை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் கேரட்டுடன் சேர்த்து முட்டையை பொரியல் செய்யும் போது அதன் ஆரோக்கிய நன்மைகளும் அதிகரிக்கும். இது குழந்தைகளுக்கும் பிடித்த சுவையில் இருக்கும்.

உங்களுக்கு கேரட் முட்டை பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் முட்டை பொரியலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கேரட் - 2
- முட்டை - 3
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- உளுந்து - 1/4 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- பச்சை மிளகாய் - 2, கீறியது
செய்முறை:
- கேரட்டை நன்றாக கழுவி தோல் நீக்கி, துருவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில், எண்ணெயை சூடாக்கி, கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்க்கவும்.
- கடுகுபருப்பு நிறம் மாறியதும் கேரட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து கேரட்டை சமைக்கவும்.
- கேரட் பாதி வெந்தவுடன், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
- கேரட்டை ஒரு பக்கமாக தள்ளி வைத்து விட்டு, பின் முட்டைகளை உடைத்து, பின் அதிக தீயில் கிளறவும். கேரட்டுடன் நன்கு கலக்கும் படி கிளறவும்.
- 2 நிமிடங்கள் சமைக்கவும், உப்பு சரிபார்த்து, எலுமிச்சை சாறு சேர்த்து, சிறிது நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, அடுப்பை அணைத்தால் வித்தியாசமான சுவையில் முட்டை பொரியல் ரெடி!



Click it and Unblock the Notifications