Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
2 குடைமிளகாய் இருந்தா.. ஒருடைம் இந்த சாதத்தை செய்யுங்க.. செஞ்ச உடனே காலி ஆகிடும்...
Capsicum Rice Recipe In Tamil: தினமும் சாம்பார், புளிக்குழம்பு என்று சமைத்து போரடித்துவிட்டதா? சட்டென்று சமையலை முடிக்க வேண்டுமா? அதே சமயம் வாய்க்கு ருசியாகவும் ஒரு சமையலை செய்ய வேண்டுமா? அப்படியானால் உங்கள் வீட்டில் குடைமிளகாய் இருந்தால், அதைக் கொண்டு ஒரு வெரைட்டி ரைஸ் செய்யுங்கள்.
இந்த குடைமிளகாய் சாதம் பார்த்ததும் அள்ளி சாப்பிடக்கூடிய வகையில் கண்கவர் நிறத்தில் இருக்கும். முக்கியமாக இந்த சாதத்தை செய்தால், செய்த உடனேயே காலியாகிவிடும். அந்த அளவில் ருசி பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு குடைமிளகாய் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடிப்பதற்கு...
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* எள்ளு - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி வரமிளகாய் - 7
சாதம் செய்வதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* தக்காளி - 2 (மெல்லியதாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* பாசுமதி அரிசி சாதம் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு,
உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் மல்லி, மிளகு, சீரகம், எள்ளு மற்றும் காஷ்மீரி
வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து ஓரளவு
கொரகொரவென்று அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும்,
எண்ணெய் ஊற்றி, நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தக்காளி
மற்றும் குடைமிளகாயை சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலா பொடி, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் வடித்து வைத்துள்ள பாசுமதி அரிசி சாதத்தை சேர்த்து,
கொத்தமல்லியை சேர்த்து நன்கு மசாலா சாதத்துடன் ஒன்று சேரும் வரை நன்கு
கிளறி விட வேண்டும்.
* இறுதியாக நெய்யை ஊற்றி கிளறி இறக்கினால், குடைமிளகாய் சாதம்
தயார்.



Click it and Unblock the Notifications











