Latest Updates
-
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
குடைமிளகாயை இந்த பக்குவத்துல பொரியல் செய்யுங்க.. ருசியும் அள்ளும்.. சத்தானதும் கூட..
Capsicum Poriyal Recipe In Tamil: தற்போது மழை பெய்வதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்படியான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமானால் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இந்த வைட்டமின் சி குடைமிளகாயில் அதிகம் உள்ளது.
ஆனால் குடைமிளகாயை உங்கள் வீட்டில் உள்ளோர் விரும்பி சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அவர்களுக்கு குடைமிளகாயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்கள். அதுவும் இந்த பொரியலில் சேர்க்கும் வேர்க்கடலை தான் இந்த பொரியலின் சுவையையே அதிகரிக்கிறது. இப்படி செய்யும் போது குடைமிளகாய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு குடைமிளகாயை பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குடைமிளகாய் - 2
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 2 ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் குடைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலையையும் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம்
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு தூவி, மஞ்சள் தூள் சேர்த்து
கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 3-4 நிமிடம் குடைமிளகாயை வேக
வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து பொடித்துக்
கொள்ள வேண்டும்.
* குடைமிளகாய் நன்கு வெந்ததும், அதில் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலை
பொடி மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு 1 நிமிடம் கிளறி
இறக்கினால், சுவையான குடைமிளகாய் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications