Latest Updates
-
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க
Capsicum Kurma Recipe in Tamil: இட்லி, தோசைக்கு அடுத்தபடியாக பெரும்பாலான வீடுகளில் பிரதான உணவாக இருப்பது சப்பாத்திதான். வழக்கமாக சப்பாத்தி மற்றும் பூரிக்கு குருமாதான் பிரதான சைடிஷாக இருக்கும். சில சமயங்களில் சிக்கன் அல்லது மட்டன் வைத்து சைடிஷ் செய்யலாம். ஆனால் எல்லா நேரத்திலும் இவற்றையே செய்து கொண்டிருக்க முடியாது. சில சமயங்களில் புதிய சைடிஸ்களை முயற்சித்து பார்க்க வேண்டும்.

புதிய சைடிஷ் என்று வரும்போது அதை குடைமிளகாயை வைத்து முயற்சிக்கலாம். சரியான முறையில் செய்தால் குடைமிளகாயையே அசைவ உணவுகள் போல அட்டகாசமான சுவையில் செய்யலாம். அதிலும் இந்த ஸ்டைல் குடைமிளகாய் குருமா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இந்த குடைமிளகாய் குருமா சப்பாத்தி, பூரி மட்டுமின்றி சாதம், புலாவ் என அனைத்துடனும் சாப்பிட சூப்பராக இருக்கும்.
உங்களுக்கு சுவையான குடைமிளகாய் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழெ குடைமிளகாய் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சை குடைமிளகாய் - 1
- வெண்ணெய் - 2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
- சர்க்கரை - 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- எலுமிச்சைச் சாறு - சில துளிகள்
வறுத்து அரைக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- வேர்க்கடலை - 3 ஸ்பூன்
- இஞ்சி - 1 ஸ்பூன்
- பூண்டு - 6 பல்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
செய்முறை:
- குடைமிளகாயை நன்றாக கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை சேர்த்து சூடாக்கவும். வேர்க்கடலையின் தோல் வெடிக்கும் வரை வறுக்கவும்.
- பின்னர் பெரிய வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து, அவை கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- பின்னர் தக்காளியைச் சேர்த்து, அது குழையும் வரை வதக்கவும். இந்த கலவையை ஆறவிட்டு, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் வெண்ணெயைச் சூடுபடுத்தவும். சீரகம் சேர்த்து வெடிக்கும் வரை வதக்கவும். பின்னர் நறுக்கிய குடைமிளகாய் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும்.
- அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து கிளறவும். அதன்பின் மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் கரம் மசாலாவை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்.
- பின்னர் உப்பு மற்றும் தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- குருமா நன்கு கொதித்து வாசனை வரும் வரை கொதிக்கவிடவும். பின்னர் அடுப்பை அணைத்து சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்.
- கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து சூடான தோசை அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.
குடைமிளகாயின் நன்மைகள்:
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- குடைமிளகாயில் உள்ள லுடீன் மற்றும் ஸீக்ஸாந்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது கண்களை பாதுகாக்கிறது.
- இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
- இதில் கலோரிகள் குறைவாகவும், நீர்/நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் எடையைக் குறைக்க உதவுகிறது.



Click it and Unblock the Notifications