Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
Restaurant Style Capsicum Onion Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் குடைமிளகாயும், வெங்காயமும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் வெங்காய கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி 10 நிமிடத்தில் சட்டென்று செய்யக்கூடியவாறு இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த கிரேவியை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள்.

உங்களுக்கு இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் வெங்காய கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் வெங்காய கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குடைமிளகாய் - 2 (பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* பெரிய வெங்காயம் - 2 (பெரிய துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சிறிது
தாளிப்பதற்கு...
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கடலை மாவு - 2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பெரிய துண்டுகளாக்கப்பட்ட வெங்காயம் மறறும்
குடைமிளகாயை சேர்த்து, சிறிது உப்பு தூவி, 2-3 நிமிடம் வதக்கி,
காய்கறிகளை மட்டும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் கடலை மாவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு
தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள்,
மல்லித் தூள் சேர்த்து, 1 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் தயிரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 2-3 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வதக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளறி, கரம்
மசாலாவைத் தூவி கலந்து, மூடி வைத்து 1 நிமிடம் வேக வைத்து இறக்கினால்,
சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் குடைமிளகாய் வெங்காய கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
