Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
நைட் சப்பாத்திக்கு குடைமிளகாய் வெச்சு இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. செம ருசியா இருக்கும்...
Capsicum Onion Gravy Recipe In Tamil: சப்பாத்திக்கு எப்போதும் உருளைக்கிழங்கை கொண்டு மசாலா செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமான கிரேவிகளையும் ட்ரை செய்தால் தான், வீட்டில் உள்ளோர் சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள்.
நீங்கள் இன்று சப்பாத்திக்கு வித்தியாசமான கிரேவி செய்ய நினைத்தால், வீட்டில் குடைமிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் இருந்தால், அதைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த குடைமிளகாய் கிரேவி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி, நாண் உடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு குடைமிளகாய் வெங்காய கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் வெங்காய கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* குடைமிளகாய் - 2
* வெங்காயம் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளிக்காத கெட்டி தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை பெரிய துண்டுகளாக
வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து லேசாக நிறம் மாற
வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் சீரகத்தை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு
தூவி கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கடலை மாவை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கிளறி, இஞ்சி
பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 2
நிமிடம் கிளறி பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* பின்பு புளிக்காத கெட்டித் தயிரை சேர்த்து கிளறி, கிரேவிக்கு
தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி வைத்து 5
நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து வதக்கி வைத்துள்ள குடைமிளகாய்
மற்றும் வெங்காயத்தை சேர்த்து கிளறி, மீண்டும் 5 நிமிடம் மூடி வைத்து
கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
குடைமிளகாய் வெங்காய கிரேவி தயார்.
Image Courtesy: Indian Recipes Tamil



Click it and Unblock the Notifications