Latest Updates
-
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்த 5 நபர்களை அவமதிப்பது மிகப்பெரிய பாவமாம் - இவர்களுக்கு நரகம் உறுதியாம் - சாணக்கிய ரகசியம் -
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
குடைமிளகாய் மசாலா
குடைமிளகாயைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று குடைமிளகாய் மசாலா. இந்த குடைமிளகாய் மசாலா சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, புல்கா, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்த காய்கறியை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ளலாம். குடைமிளகாயைக் கொண்டு பல ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று குடைமிளகாய் மசாலா. இந்த குடைமிளகாய் மசாலா சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, புல்கா, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம்.

உங்களுக்கு குடைமிளகாய் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* இஞ்சி - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4-5 (பொடியாக நறுக்கியது)
* துருவிய தேங்காய் - 6 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* வெள்ளை எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
பிற பொருட்கள்....
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 1 (நறுக்கியது)
* குடைமிளகாய் - 4-5 (நீள நீளமாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - சிறிது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலை, வெள்ளை எள்ளு, மல்லி மற்றும் கசகசா சேர்த்து குறைவான தீயில் 3-4 நிமிடம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சிறிது உப்பு சேர்த்துக் கொண்டால், வெங்காயம் சீக்கிரம் வெந்துவிடும்.
* பின்பு அதில் துருவிய தேங்காயை சேர்த்து 7-8 நிமிடம் வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் புளியையும் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் குடைமிளகாயை சேர்த்து மிதமான தீயில் 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் ஒரு கப் நீர் ஊற்றி கிளறி, வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, கரம் மசாலா பொடியைத் தூவி குறைவான தீயில் 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் மசாலா தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications