Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
அடுத்தமுறை மல்லி சட்னியுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் சும்மா தாறுமாறா இருக்கும்...
Capsicum Kothamalli Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் செய்யும் இட்லி, தோசைக்கு அடிக்கடி மல்லி சட்னியை செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை மல்லி சட்னி செய்வதாக இருந்தால், சற்று வித்தியாசமான சுவையில் செய்யுங்கள்.
அதற்கு மல்லி சட்னிக்கு வதக்கும் போது, அத்துடன் ஒரு குடைமிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் சட்னியின் சுவை வேற லெவலில் இருக்கும். மேலும் இப்படி மல்லி சட்னியை செய்தால், அடிக்கடி இப்படி தான் உங்கள் வீட்டில் இருப்போர் செய்ய சொல்வார்கள். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு குடைமிளகாய் மல்லி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் மல்லி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குடைமிளகாய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* கொத்தமல்லி - 2 கைப்பிடி (வெறும் இலைகள் மட்டும்)
* எண்ணெய் - 1 டேபிள ஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* சின்ன வெங்காயம் - 10
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கல் உப்பு - 1/2 டீஸ்பூன்
* புளி - 1 துண்டு
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம்
மாற வதக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய குடைமிளகாயை சேர்த்து லேசாக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், கல் உப்பு மற்றும் புளி சேர்த்து 1
நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லி இலைகளை சேர்த்து சுருண்டு வரும் வரை வதக்கி
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து ஒருமுறை
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில்
சட்னியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான குடைமிளகாய் கொத்தமல்லி சட்னி தயார்.



Click it and Unblock the Notifications