Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
1 குடைமிளகாய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அல்டிமேட்டா இருக்கும்...
Kudaimilagai Getti Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு தினமும் தவறாமல் சட்னி செய்வீர்களா? அப்படியே சட்னி செய்தாலும், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று ஒரே மாதிரியான சட்னியைத் தான் திரும்ப திரும்ப செய்வீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் சற்று வித்தியாசமான சட்னியை செய்து கொடுக்க கேட்கிறார்களா?
உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? ஆனால் குடைமிளகாயை யாரும் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் அந்த குடைமிளகாயைக் கொண்டு சட்னி செய்யுங்கள். இப்படி குடைமிளகாய் கொண்டு சட்னி செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த சட்னி இட்லி, தோசை என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். கெட்டி சட்னியாக செய்து சாப்பிடும் போது இன்னும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு குடைமிளகாய் கெட்டி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் கெட்டி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* சிறிய குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச்
* புளி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - 1 கையளவு
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாயை சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் குடைமிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் இஞ்சி,
புளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு கொத்தமல்லி மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, நீரை அதிகம்
ஊற்றி விடாமல், கெட்டி சட்னி பதத்திற்கு அளவாக ஜாரில் நீர் சேர்த்து
கலந்து ஊற்றி கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான குடைமிளகாய் சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications











