Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1 குடைமிளகாய் இருந்தா போதும்... இட்லி, தோசைக்கு சூப்பர் சட்னி செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Kudaimilagai Chutney In Tamil: காலையில் இட்லி தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அந்த குடைமிளகாய் கொண்டு அருமையான சுவையில் சட்னி செய்யுங்கள். இந்த குடைமிளகாய் சட்னி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.
இந்த சட்னி சற்று காரமாக இருந்தாலும், இதன் சுவை வேற லெவலில் இருந்தது என்றே வீட்டில் உள்ளோர் பாராட்டுவார்கள். நீங்கள் இதுவரை குடைமிளகாய் கொண்டு சட்னி செய்ததில்லை என்றால், அடுத்த முறை குடைமிளகாயை வாங்கி சட்னியை தவறாமல் ட்ரை செய்யுங்கள்.

உங்களுக்கு குடைமிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 2
* குடைமிளகாய் - 1
* பூண்டு - 2 பல்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் குடைமிளகாய் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு
குடைமிளகாயின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சிறிய துண்டு புளி, சுவைக்கேற்ப உப்பு மற்றும்
கொத்தமல்லியை சேர்த்து, நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து
நன்கு வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் வதக்கிய மற்ற பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்து,
ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான
குடைமிளகாய் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications