Latest Updates
-
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா?
சிக்கனை குடைமிளகாயுடன் சேர்த்து இப்படி மசாலா செஞ்சு பாருங்க... டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்...!
Capsicum Chicken Masala Recipe in Tamil: சிக்கன் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான பட்ஜெட்டிற்கு ஏற்ற அசைவ உணவு வகை. ஞாயிற்று கிழமையில் வீட்டில் சிக்கன் செய்யாதோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால் சிக்கனை விதவிதமாய் வித்தியாசமாய் செய்தால் தானே சலிப்பு ஏற்படாமல் இருக்கும். உங்கள் சமையலறையில் புதிய சுவையை கூட்ட இந்த குடைமிளகாய் சிக்கன் மசாலாவை செய்து பாருங்கள். வாங்க எப்படி செய்யறதுன்னு இங்க பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:
- சிக்கன் - ½ கிலோ
- இஞ்சி - ஒரு துண்டு (2 இன்ச் அளவு)
- பூண்டு - 12 அல்லது 15 பல்
- மிளகாய்த் தூள் - 1 ½ டீ ஸ்பூன்
- குடை மிளகாய் - 2
- பெரிய வெங்காயம் - 2
- சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சம் பழம் - ½
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- கார்ன் ஃ பிளார் மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- சிக்கன் துண்டுகளை சுத்தமாக இரண்டு முறை அலசி கடைசியாக மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து அலசி தனியே வைத்து கொள்ளவும்.
- குடை மிளகாயை இரண்டு இன்ச் அளவு துண்டுகளாக டிக்காவிற்கு சேர்ப்பது போல் நறுக்கி கொள்ளவும்.
- பூண்டு மற்றும் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- அதன் மேற்பரப்பில் கருமை நிற பூஞ்சை இருந்தால் அதை சுத்தமாக கழுவி விடவும்.
- பின் வெங்காயத்தையும் குடை மிளகாயை நறுக்கியது போல் இரண்டு இன்ச் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் தோல் உரித்த பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
- எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் சிக்கனை சேர்த்து அதனுடன் சோயா சாஸ், பிழிந்து
வைத்த எலுமிச்சை சாறு, மற்றும் அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது
சேர்க்கவும்.
- பின் அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு
உப்பு சேர்த்து நன்கு கலந்து குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஊற
வைக்கவும்.
- அதை அப்படியே அடுப்பில் வைத்து சிக்கன் நன்கு வேகும் வரை வைக்கவும். இடையிடையே கிளறிவிட்டு தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கொள்ளவும்.
- நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி ஆற விடவும்.
- அடி கனமான பாத்திரம் அல்லது வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் வேக வைத்து ஆற வைத்த சிக்கன் சேர்த்து நன்றாக கிளறவும்.
- கடைசியாக கார்ன் ஃ பிளார் மாவைத் தூவி நன்கு கிளறி இறக்கினால் சுவையான குடைமிளகாய் சிக்கன் தயார்!



Click it and Unblock the Notifications