Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஒருமுறை காபியை இப்படி செஞ்சு குடிங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செஞ்சு குடிப்பீங்க...
Cappuccino Coffee Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் காபி பிரியரா? இதனால் வீட்டில் டீயை விட காபியைத் தான் அதிகம் செய்து குடிப்பீர்களா? காபி பிரியர்களுக்கு நிச்சயம், அதில் உள்ள வெரைட்டிகளை சுவைக்க ஆசை இருக்கும். அதுவும் கேப்புசினோ, கோல்ட் காபி போன்றவற்றின் சுவையை ஒருமுறையாவது ருசித்துப் பார்க்க வேண்டுமென்று விரும்புவார்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் அப்படியான ஆசை இருந்தால், அந்த கேப்புசினோ காபியை வீட்டிலேயே செய்து கொடுங்கள். அதெப்படி காபி மெஷின் இல்லாமல் கேப்புசினோ காபியை செய்வதென்று நீங்கள் கேட்கலாம். ஆனால் உண்மையில் கேப்புசினோ காபியை செய்வதற்கு எந்த காபி மெஷினும் தேவையில்லை.

ஒரு ஸ்பூன் இருந்தாலே போதும், சுவையான கேப்புசினோ காபியை செய்யலாம். ஆனால் இந்த காபியை செய்வதற்கு சற்று பொறுமை மட்டும் தேவை. பொறுமை இருந்தால், தினமும் கூட இந்த காபியை வீட்டில் செய்து குடிக்கலாம். முக்கியமாக இந்த காபியை ஒருமுறை சுவைத்துவிட்டால், பின் இப்படி தான் காபி குடிக்க வேண்டுமென்ற ஆசை வந்துவிடும்.
உங்களுக்கு வீட்டிலேயே கேப்புசினோ காபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேப்புசினோ காபி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* இன்ஸ்டன்ட் காபித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்
* சூடான பால் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு டம்ளரை எடுத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் இன்ஸ்டன்ட்
காபித் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி, ஒரு ஸ்பூன் கொண்டு நன்கு
10 நிமிடம் கைவிடாமல் ஒரே வேகத்தில் அடித்து கலக்க வேண்டும்.
* கலவையானது நன்கு நுரைத்து கெட்டியானதும், அந்த நுரைத்த காபி
பேஸ்ட்டை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து டம்ளரில் போட்டு, சூடான பாலை ஊற்ற
வேண்டும்.
* பிறகு ஸ்பூன் கொண்டு நன்கு கலந்துவிட்டால், சுவையான கேப்புசினோ காபி
தயார்.



Click it and Unblock the Notifications