Latest Updates
-
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
ஜூலை 27-ல் வக்ரமடையும் சனி பகவான்: டிசம்பர் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
இந்த 4 குணங்கள் இருப்பவர்கள் அதிபுத்திசாலியாகவும், மேதைகளாகவும் இருப்பார்களாம் - சாணக்கிய தந்திரம்
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க..
Cafe Style Bun Maska Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு அற்புதமான டெசர்ட் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் இந்த டெசர்ட் சாப்பிட்டால் வயிறு நிரம்ப வேண்டுமா? அப்படியானால் கஃபே ஸ்டைல் பன் மஸ்காவை செய்து கொடுங்கள். இந்த கஃபே ஸ்டைல் பன் மஸ்கா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதே வேளையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இந்த பன் மஸ்காவை ஒருமுறை செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்குமாறும் கேட்பார்கள்.

உங்களுக்கு இந்த கஃபே ஸ்டைல் பன் மஸ்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கஃபே ஸ்டைல் பன் மஸ்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பாதாம் பவுடர் அரைப்பதற்கு...
* பாதாம் - 10
* முந்திரி - 3
* பிஸ்தா - 6
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பிற பொருட்கள்...
* காய்ச்சிய பால் - 1/2 லிட்டர்
* அரைத்த பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* குங்குமப்பூ - 1 சிட்டிகை
* உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம்
* கண்டென்ஸ்டு மில்க் - 2 டேபிள் ஸ்பூன்
* பன் - 2
செய்முறை:
* முதலில் பாதாம் பால் செய்வதற்கு மிக்சர் ஜாரில் பாதாம்,
முந்திரி, பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் மஞ்சள் தூள்
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய 1/2 லிட்டர் பாலை ஊற்றி, அதில்
அரைத்த பொடியை 4 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து, பாலை நன்கு
சூடேற்ற வேண்டும்.
* பின்பு அதில் சர்க்கரை சேர்த்து கலந்து, நன்கு சூடேற்ற
வேண்டும்.
* அதன் பின் அதில் 1 சிட்டிகை குங்குமப்பூவை சேர்த்து கலந்து இறக்கி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் உப்பில்லாத வெண்ணெயை எடுத்து, அத்துடன்
கண்டென்ஸ்டு மில்க்கை சேர்த்து நன்கு ஒருசேர கலந்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து 1 பன்னை எடுத்து, அதை இரண்டு துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின் அந்த பன்னின் ஒரு பாதியை எடுத்து அதன் மேல் கலந்து வைத்துள்ள
வெண்ணெயை தடவிக் கொள்ள வேண்டும். பின் அடுத்த பாதியை எடுத்து, அதிலும்
வெண்ணெயை தடவ வேண்டும்.
* பிறகு அந்த இரண்டு துண்டுகளை ஒன்றாக வைத்து, அதை 4 துண்டுகளாக
வெட்டி, அதன் மேல் தயாரித்து வைத்துள்ள பாதாம் பாலை ஊற்றி,
பரிமாறினால், சுவையான பன் மஸ்கா தயார்.



Click it and Unblock the Notifications