Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
முட்டைக்கோஸையும் முட்டையையும் வெச்சு இப்படியொரு தடவை கிரேவி செஞ்சு பாருங்க... டேஸ்ட் அள்ளும்..
Cabbage with Egg Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்கள் என்றால் அதற்கு எப்போதும் வழக்கமாக செய்யும் சைடு டிஷ் செய்யாமல், வீட்டில் முட்டைக்கோஸும், முட்டையும் இருந்தால், அவற்றைக் கொண்டு புதுமையான முறையில் கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சற்று ஈஸியாகவும் இருக்கும்.
உங்களுக்கு முட்டைக்கோஸ் முட்டை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் முட்டை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* முட்டைக்கோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* முட்டை - 5
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 3
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 2
* தண்ணீர் - 1 1/2 கப்
* தேங்காய் பால் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியில் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸைப் போட்டு,
சிறிது உப்பு தூவி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் மிளகுத்
தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில்
வேக வைத்துள்ள முட்டைக்கோஸை சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு டிபன் பாக்ஸில் எண்ணெய் தடவி, இந்த முட்டை கலவையை ஊற்றி,
டிபன் பாக்ஸை மூடி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 5 நிமிடம் வேக வைத்து
இறக்கி, டிபன் பாக்ஸை திறந்து, சிறிது நேரம் குளிர வைக்க
வேண்டும்.
* பின் வேக வைத்த முட்டையை ஒரு தட்டில் திருப்பிப் போட்டு எடுத்துக்
கொண்டு, கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்த முட்டை துண்டுகளை சேர்த்து
பொன்னிறமாக ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதே வாணலியில் மீண்டும் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் சோம்பு, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை
சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* அடுத்து பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின் அதில் 1 1/2 நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தேங்காய் பாலை ஊற்றி நன்கு 2
நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக ப்ரை செய்த முட்டையை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் முட்டை கிரேவி
தயார்.
Image Courtesy: Simply Cooking and Health



Click it and Unblock the Notifications











