Latest Updates
-
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க -
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நகரம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும் -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
2 கப் முட்டைக்கோஸ் இருந்தா போதும் சூப்பரான வடை சுடலாம்... செஞ்சு பாருங்க... நீங்களே அசந்துருவீங்க...!
Cabbage Vada Recipe in Tamil: தென்னிந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு தின்பண்டம் என்றால் அது வடைதான். ஒவ்வொரு முறை தேநீர் கடையை கடக்கும் போதும் நமது கண்கள் நிச்சயம் வடையைத் தேடும். அந்த அளவிற்கு வடை நம் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்ததாகும். வடை எவ்வளவுதான் சுவயானதாக இருந்தாலும் அது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த சுவையான வடையை ஆரோக்கியமானதாக மாற்ற அதில் சில காய்கறிகளை சேர்த்து செய்யலாம். குறிப்பாக முட்டைக்கோஸ் சேர்த்து செய்யும் போது அது வடையின் சுவையை எந்த விதத்திலும் பாதிக்காமல் அதன் ஆரோக்கியப் பண்புகளை அதிகரிக்கும். இந்த பதிவில் சூப்பரான முட்டைக்கோஸ் வடையை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- முக்கால் கப் கடலைப்பருப்பு
- கால் கப் உளுந்தம்பருப்பு
- கால் கப் துவரம் பருப்பு
- 2 கப் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ்
- 2 நறுக்கிய பச்சை மிளகாய், நன்றாக நறுக்கியது
- 2 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
- நறுக்கிய கறிவேப்பிலை சிறிதளவு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 1 ஸ்பூன் உப்பு
- வறுக்க எண்ணெய்
செய்முறை:
- முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் துவரம் பருப்பை போட்டு நன்றாக கழுவவும்.
- பின்னர் போதுமான நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பருப்பு நன்றாக ஊறியதும் தண்ணீரை முழுவதுமாக வடிகட்டி 10 நிமிடங்கள் வைக்கவும்.
- தண்ணீர் சேர்க்காமல் கரடுமுரடான பேஸ்டாக அரைக்கவும்.
- இந்த பருப்பு கலவையை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றவும்.
- பின்னர் 2 கப் முட்டைக்கோஸ், 2 நறுக்கிய மிளகாய், 2 ஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, 1 ஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும்.
- இந்த கலவையை நன்கு கலந்து கொள்ளவும்.
- தண்ணீர் கொஞ்சம் அதிகமாக இருப்பது போல தோன்றினால் அதில் 2 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- சுவையை சரிபார்த்து விட்டு மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுக்கத் தேவையான எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் மாவை வடையாகத் தட்டி எண்ணெயில் போடவும்.
- வடை நன்கு பொன்னிறமாக மாறியதும் அதை ஒரு வடிகட்டிக்கு மாற்றி எண்ணெயை வடிகட்டவும்.
- எண்ணெய் வடிந்ததும் சூடான முட்டைக்கோஸ் வடையை மகிழ்ச்சியாக சாப்பிடுங்கள்.



Click it and Unblock the Notifications
