Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
தாபா ஸ்டைல் முட்டைக்கோஸ் பட்டாணி மசாலா ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க..சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்!
Cabbage Sabzi Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? இன்று இரவும் சப்பாத்தி செய்யப் போகிறீர்கள் என்றால் அதற்கு எப்போதும் வழக்கமாக செய்யும் சைடிஷ் செய்யாமல் புதிதாக வித்தியாசமாக ஒரு சைடிஷ் செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் முட்டைக்கோஸும், பட்டாணியும் இருந்தால், அவற்றை வைத்து ஒரு புதுமையான முறையில் கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் எளிதானதாகும்.
இந்த பஞ்சாபி ஸ்டைல் முட்டைக்கோஸ் பட்டாணி குருமா இதுவரை நீங்கள் செய்த சைடிஷ்களிலேயே மிகவும் வித்தியாசமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். மேலும் இதில் உருளைக்கிழங்கும் சேர்த்து செய்யப்படுவதால் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு பஞ்சாபி ஸ்டைல் முட்டைக்கோஸ் பட்டாணி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் பட்டாணி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 3 டீஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் கசூரி மேத்தி
- 1 பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கியது
- ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 பழுத்த தக்காளி, பொடியாக நறுக்கியது
- 1 உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கியது
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
- தேவையான அளவு உப்பு
- 4 கப் முட்டைக்கோஸ், துருவியது
- ½ கப் பட்டாணி
- ¼ டீஸ்பூன் கரம் மசாலா
- 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி இலைகள், பொடியாக நறுக்கியது
செய்முறை:
- முதலில், ஒரு பெரிய கடாயில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கவும். 1 டீஸ்பூன் சீரகம் மற்றும் 1 டீஸ்பூன் கசூரி மேத்தியை வாசனை வரும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் அதைத் தொடர்ந்து ½ டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் 1 நறுக்கிய தக்காளி சேர்த்து, அது மென்மையாகும் வரை வதக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய 1 உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
- பின்னர் ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள், ½ டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், 1 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். மசாலா நன்கு கலக்கும் படி கிளறவும்.
- அதைத்தொடர்ந்து 4 கப் முட்டைக்கோஸ் மற்றும் ½ கப் பட்டாணி சேர்த்து நன்கு கிளறவும்.
- முட்டைக்கோஸ், பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு முழுமையாக வேகும் வரை மூடி வைத்து சமைக்கவும்.
- மசாலா நன்கு வெந்து வாசனை வந்ததும் ¼ டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். நன்கு கலக்கி அடுப்பை அணைத்தால் பஞ்சாபி ஸ்டைல் முட்டைக்கோஸ் பட்டாணி சப்ஜி ரெடி!



Click it and Unblock the Notifications