Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
முட்டைக்கோஸை ஒருடைம் இப்படி பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
Cabbage Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் முட்டைக்கோஸ் என்றாலே ஓடுவார்களா? எப்போது முட்டைக்கோஸ் செய்தாலும் அதை நீங்கள் மட்டும் தான் சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை முட்டைக்கோஸை இந்த மாதிரி பொரியல் செய்யுங்கள். பின் பாருங்கள் உங்களுக்கே முட்டைக்கோஸ் சாப்பிட கிடைக்காது.
ஏனெனில் அந்த அளவில் இந்த முட்டைக்கோஸ் பொரியல் அருமையாக இருக்கும். இந்த பொரியலானது சாம்பார் சாதம், புளிக்குழம்பு, ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். டயட்டில் இருப்பவர்கள் கூட முட்டைக்கோஸை இப்படி சமைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* முட்டைக்கோஸ் - 1/4 கிலோ
* தேங்காய் - 1/4 கப் (துருவியது)
செய்முறை:
* முதலில் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் பாசிப்பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்க
வேண்டும்.
* அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, உப்பு தூவி
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை கழுவிப் போட்டு 1 நிமிடம்
மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து கிளறி, மூடி வைத்து 8-10
நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறிவிட்டு, அடுப்பை
அணைத்துவிட வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறினால், சுவையான
முட்டைக்கோஸ் பொரியல் தயார்.
Image Courtesy: Indian Recipes Tamil



Click it and Unblock the Notifications
