ஒரு டைம் முட்டைக்கோஸை இப்படி செஞ்சு சப்பாத்தியுடன் கொடுங்க... பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Cabbage Paal Curry Recipe In Tamil: சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் உள்ளதா? ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் முட்டைக்கோஸ் என்றாலே ஓடிவிடுவார்களா? அப்படியானால் அவர்களுக்கு முட்டைக்கோஸைக் கொண்டு பால் கறி செய்து கொடுங்கள்.

இந்த முட்டைக்கோஸ் பால் கறி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, தோசை, பூரி, இட்லி போன்றவற்றுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

Cabbage Paal Curry How To Make a Cabbage Paal Curry Recipe

உங்களுக்கு முட்டைக்கோஸ் பால் கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் பால் கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* முட்டைக்கோஸ் - 300 கிராம் (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - 1 துண்டு
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)

அரைப்பதற்கு...

* தேங்காய் - 1/4 மூடி
* பச்சை மிளகாய் - 2
* முந்திரி - 5-6
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் முட்டைக்கோஸை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், முந்திரி, பொட்டுக்கடலை, சோம்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், பிரியாணி இலை, கல்பாசி ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்னர் கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக முட்டைக்கோஸை சேர்த்து உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் பால் கறி தயார்.

Image Courtesy: Traditionally Modern Food

[ of 5 - Users]
Story first published: Friday, April 5, 2024, 21:46 [IST]
Desktop Bottom Promotion