Latest Updates
-
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சொஜ்ஜி அப்பம் ரெசிபி - இந்த வருஷம் இந்த சூப்பரான இனிப்பை செஞ்சு பாருங்க -
காளான் வாங்குனா ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி சைடு டிஷ் செய்யுங்க.. அள்ளும்.. -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடத்துல கண்ணாடியை வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பீங்க.. -
97 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா? இந்த நாட்டில் ஒரு ஹாஸ்பிடல் கூட இல்லையாம் -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி எள்ளு பூர்ண கொழுக்கட்டை செய்யுங்க.. 10 நிமிஷத்துல 50 கூட செய்வீங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் புத்திசாலி அம்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
முட்டைக்கோஸ் வெச்சு ஈவ்னிங் இப்படி மொமோஸ் செஞ்சு சாப்பிடுங்க.. பசியும் அடங்கும்.. எடையும் குறையும்..
Cabbage Momos Recipe In Tamil: டயட்டில் இருப்பவர்களால் கண்டதை சாப்பிட முடியாது. இத்தகையவர்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால், சூப், சாலட் என்று தான் சாப்பிட முடியும். ஆனால் டயட்டில் இருப்போருக்கு ஒரு அருமையான ஸ்நாக்ஸ் உள்ளது. அதுதான் முட்டைக்கோஸ் மொமோஸ். பொதுவாக மொமோஸ் மைதா கொண்டு செய்யப்படும்.
ஆனால் இந்த மொமோஸ் முட்டைக்கோஸ் கொண்டு செய்யப்படுவதால், இது எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற ஸ்நாக்ஸாகும். இந்த மொமோஸில் கார்போஹைட்ரேட் குறைவு. மேலும் இது காய்கறிகளைக் கொண்டு செய்யப்படுவதால் சத்தானதும் கூட.

உங்களுக்கு முட்டைக்கோஸ் மொமோஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் மொமோஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டைக்கோஸ் - 1
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* சீஸ் - சிறிது
செய்முறை:
* முதலில் முட்டைக்கோஸின் இலைகளை தனித்தனியாக பிரித்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு அகலமான பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர்
நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சிறிது உப்பு சேர்த்து கலந்து,
முட்டைக்கோஸ் இலைகளை சேர்த்து மூடி வைத்து, வேக வைத்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து
வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட், குடைமிளகாய், சிறிது நறுக்கிய
முட்டைக்கோஸ் சேர்த்து, சிறிது உப்பு தூவி வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சோயா சாஸை சேர்த்து கிளறி, 1 நிமிடம் வதக்கி, பின்
துருவிய சீஸை சிறிது சேர்த்து வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் வேக வைத்த முட்டைக்கோஸ் இலையை எடுத்து, அதன் நடுவே சிறிது
வதக்கிய காய்கறிகளை வைத்து, பீடா மடிப்பது போன்று மடித்துக் கொள்ள
வேண்டும். இதேப் போல் அனைத்து முட்டைக்கோஸ் இலைகளையும் செய்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சிறிது வைத்து
உருகியதும், மடித்து வைத்துள்ள முட்டைக்கோஸை வைத்து, முன்னும்,
பின்னும் ப்ரை செய்து எடுத்தால், சுவையான முட்டைக்கோஸ் மொமோஸ்
தயார்.



Click it and Unblock the Notifications
