Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
முட்டைக்கோஸ் இருந்தா.. இந்த மாதிரி கூட்டு செய்யுங்க.. சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும்...
Cabbage Kootu Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் உள்ளதா? அப்படியானால் அந்த முட்டைக்கோஸ் கொண்டு அட்டகாசமான சுவையில் கூட்டு செய்யுங்கள்.
இந்த முட்டைக்கோஸ் கூட்டு சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த முட்டைக்கோஸ் கூட்டு குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் வேகமாக செய்யக்கூடிய வகையில் சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* துவரம் பருப்பு - 1/2 கப்
* முட்டைக்கோஸ் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* வரமிளகாய் - 5
* தண்ணீர் - தேவையான அளவு
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு..
* தேங்காய் எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரில் பாசிப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை கழுவிப்
போட்டு 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்கி,
விசில் போனதும் குக்கரைத் திறந்து, நன்கு மசித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முட்டைக்கோஸ், மஞ்சள்
தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குறைவான தீயில் வைத்து, சிறிது
நீரைத் தெளித்து, முட்டைக்கோஸை வேக வைத்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து
பொன்னிறமாக வறுத்த பின், வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.
* அடுத்து துருவிய தேங்காய் மற்றும் சீரகத்தை சேர்த்து நன்கு வறுத்து
இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வேக வைத்துள்ள பருப்புடன், வேக வைத்துள்ள முட்டைக்கோஸை
சேர்த்து, அதோடு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு கிளறி, அடுப்பில் வைத்து, குறைவான தீயில் வைத்து
2 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள்
ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
வரமிளகாய், கறிவேப்பபிலை சேர்த்து தாளித்து, முட்டைக்கோஸ் கூட்டுடன்
சேர்த்து நன்கு கிளறினால், சுவையான முட்டைக்கோஸ் கூட்டு தயார்.
Image Courtesy: masalachilli



Click it and Unblock the Notifications