Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
முட்டைக்கோஸை ஒருடைம் இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அல்டிமேட்டா இருக்கும்..
Cabbage Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் உள்ளதா?
அப்படியானால் அந்த முட்டைக்கோஸ் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த முட்டைக்கோஸ் கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். மேலும் இப்படி முட்டைக்கோஸை கிரேவி செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* முட்டைக்கோஸ் - 1/4 கிலோ (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 200 மிலி
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/2 கப்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 4
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பொடியாக நறுக்கிய தேங்காய், பட்டை,
கிராம்பு, சோம்பு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து,
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் இஞ்சி
பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து நன்கு கிளறி,
அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, 200 மிலி நீரை
ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான முட்டைக்கோஸ் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications