Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
4 முட்டையும், முட்டைக்கோஸையும் வெச்சு.. ஒருவாட்டி இந்த கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா அள்ளும்...
Cabbage Egg Gravy Recipe In Tamil: நைட் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அதற்கு வாய்க்கு ருசியாக ஏதாவது ஒரு கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் முட்டை உள்ளதா? அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு வாய்க்கு ருசியாக ஒரு வித்தியாசமான கிரேவியை செய்யுங்கள்.
நிச்சயம் இந்த கிரேவியை நீங்கள் இதுவரை செய்திருக்கமாட்டீர்கள். அதுவும் இப்படி முட்டைக்கோஸை செய்யும் போது, முட்டைக்கோஸ் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முட்டைக்கோஸ் முட்டை கிரேவி சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் முட்டை கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் முட்டை கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டைக்கோஸ் - 1/4 கிலோ
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* முட்டை - 4
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* தண்ணீர் - 1/2 லிட்டர் + தேவையான அளவு
* பிரியாணி இலை - 2
* பட்டை - 1 பெரிய துண்டு
* கல்பாசி - 1 துண்டு
* மராட்டி மொக்கு - 1
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு - 2
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 5 பல்
* முந்திரி - 4
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 3 (இரண்டாக வெட்டியது)
* பெரிய தக்காளி - 2 (இரண்டாக வெட்டியது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து நிறம் மாறும் வரை
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய
முட்டைக்கோஸை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு இட்லி தட்டில் எண்ணெய் தடவி, அதில் இந்த முட்டை கலவையை
ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின்பு இட்லி தட்டை மேலே வைக்கும் அளவில் ஒரு வாணலியை அடுப்பில்
வைத்து, அதில் 1/2 லிட்டர் நீரை ஊற்றி, அத்துடன் பிரியாணி இலை, பட்டை,
கிராம்பு, மராட்டி மொக்கு, கல்பாசி, அன்னாசிப்பூ, சோம்பு, மிளகு,
இஞ்சி, பூண்டு, முந்திரி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி
ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் மேல் இட்லி தட்டை வைத்து, மூடி வைத்து, 10 நிமிடம் வேக
வைத்து இறக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, இட்லி தட்டு குளிர்ந்ததும்,
அதில் உள்ள முட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த முட்டை இட்லியை துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் வேக வைத்த வெங்காயம் தக்காளியில் உள்ள நீரை வட்டிகட்டி
பயன்படுத்தி வடிகட்டி, அந்த நீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வேக வைத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து வதக்கி, வடிகட்டி
வைத்துள்ள நீரை ஊற்றி, வேண்டுமானால் கிரேவிக்கு தேவையான அளவு நீரை
ஊற்றி கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
சேர்த்து கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் துண்டுகளாக்கப்பட்ட முட்டையை சேர்த்து
கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கசூரி மெத்தியை தூவி கிளறினால், சுவையான முட்டைக்கோஸ்
முட்டை கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications











