Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு
முட்டைக்கோஸைக் கொண்டு கடலைப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும். இந்த முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்திக்கு ஒரு நல்ல சைடு டிஷ்ஷாகவும் இருக்கும்.
ஆரோக்கியமான உடலுக்கு காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். காய்கறிகளில் அத்தியாவசிய சத்துக்கள் இருப்பதோடு, கொழுப்புக்கள் அதிகம் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு சுவையான மற்றும் ஏராளமான நன்மைகளை வழங்கும் காய்கறி தான் முட்டைக்கோஸ். இந்த முட்டைக்கோஸை பச்சையாகவே சாப்பிடலாம். ஆனால் இந்த முட்டைக்கோஸைக் கொண்டு கடலைப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும். இந்த முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்திக்கு ஒரு நல்ல சைடு டிஷ்ஷாகவும் இருக்கும்.

முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? முட்டைக்கோஸை அடிக்கடி உணவில் சேர்க்கும் போது, புற்றுநோயின் அபாயம் குறையும், எடை இழப்பிற்கு உதவும், மூளையின் ஆரோக்கியம் மேம்படும், செரிமானத்திற்கு நல்லது, எலும்புகளுக்கு நல்லது மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.
சரி, உங்களுக்கு முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மீடியம் சைஸ் முட்டைக்கோஸ் - 1 (நறுக்கியது)
* கடலைப்பருப்பு - 1/2 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5-6 பல் (பொடியாக நறுக்கியது அல்லது தட்டியது)
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் கடலைப்பருப்பை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதை நீரில் போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின் அதில் பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய முட்டைக்கோஸ், ஊற வைத்த கடலைப் பருப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி மூடி வைத்து, 10-15 நிமிடம் முட்டைக்கோஸை நன்கு வேக வைக்க வேண்டும்.
* முட்டைக்கோஸ் வெந்ததும், துருவிய தேங்காயை சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு தயார்.
Image Courtesy: vegrecipesofindia



Click it and Unblock the Notifications

