Latest Updates
-
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
முட்டைக்கோஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி போண்டா செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு சாப்பிடுவாங்க..
Cabbage Bonda Recipe In Tamil: பனிப்பொழியும் காலத்தில் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, மொறுமொறுவென்றும், சூடாகவும் ஸ்நாக்ஸ் சாப்பிட தோன்றும். அப்போது பலரும் வீட்டில் உள்ள வெங்காயம், உருளைக்கிழங்கைக் கொண்டு பஜ்ஜி, போண்டா என்று தான் செய்து சாப்பிடுவார்கள்.
ஆனால் உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் இருந்தால், அந்த முட்டைக்கோஸைக் கொண்டு போண்டா செய்து சாப்பிடுங்கள். இப்படி முட்டைக்கோஸ் கொண்டு போண்டா செய்யும் போது, அது அட்டகாசமான சுவையில் இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இது முட்டைக்கோஸ் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டைக்கோஸ் - 3/4 கிலோ
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கடலை மாவு - 1/2 கப்
* மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* அரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* சூடான எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/4 டம்ளர்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் முட்டைக்கோஸை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் துருவிய முட்டைக்கோஸை எடுத்துக் கொண்டு,
அத்துடன் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், பொடியாக
நறுக்கிய பச்சை மிளகாய், 1 கைப்பிடி கொத்தமல்லி, கறிவேப்பிலை
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் கடலை மாவு, மைதா மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், கரம்
மசாலா, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் பெருங்காயத் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து
கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அடுத்து அதில் நன்கு சூடான எண்ணெயை ஊற்றி பிசைய வேண்டும்.
* அதன் பின் அதில் ஒரு 1/4 டம்ளருக்கும் குறைவாக நீரை தெளித்து,
போண்டா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து உருட்டி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து
எடுத்தால், சுவையான முட்டைக்கோஸ் போண்டா தயார்.



Click it and Unblock the Notifications