Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மோர் ஃப்ரைடு சிக்கன்
ஃப்ரைடு சிக்கனிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மோர் ஃப்ரைடு சிக்கன். இந்த சிக்கன் நன்கு மென்மையாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.
இந்த வார விடுமுறையன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்க போகிறீர்களா? சிக்கன் வாங்கினால் நிச்சயம் வீட்டில் ஃப்ரைடு சிக்கன் செய்வோம். ஆனால் சில சமயங்களில் ஃப்ரைடு சிக்கன் மென்மையாக இல்லாமல் இருக்கும். இந்நிலையில் சிக்கன் மென்மையாக இருப்பதற்கு தயிர் சேர்ப்போம். ஆனால் ஃப்ரைடு சிக்கனிலேயே பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மோர் ஃப்ரைடு சிக்கன். இந்த சிக்கன் நன்கு மென்மையாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு மோர் ஃப்ரைடு சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மோர் ஃப்ரைடு சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
ஊற வைப்பதற்கு...
* மோர் - 2 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கோட்டிங்கிற்கு...
* மைதா - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் சிக்கனை எடுத்து, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி ஃப்ரிட்ஜில் வைத்து 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* சிக்கன் நன்கு ஊறியதும் ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு தட்டில் மைதா, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒவ்வொரு சிக்கன் துண்டுகளையும் எடுத்து தட்டில் உள்ள மாவில் நன்கு பிரட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் மாவில் பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும். 10 நிமிடம் சிக்கனை அப்படியே ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைத்து, பின் எடுக்க வேண்டும். இப்போது சுவையான மோர் ஃப்ரைடு சிக்கன் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
