Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மட்டன் வாங்குனா.. ஒருவாட்டி இந்த பட்டர் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்..
Butter Mutton Gravy Recipe In Tamil: வார விடுமுறை வந்தாலே, உங்கள் வீட்டில் மூன்று வேளையும் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு நாளை கொண்டாடுவீர்களா? அதுவும் நீங்கள் மட்டனை வாங்கினால், எப்போதும் குழம்பு, வறுவல், சுக்கா என்று தான் செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரியான சுவையில் தான் எப்போதும் செய்து சாப்பிடுவீர்களா?
சற்று வித்தியாசமான சுவையில் மட்டனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருமுறை பட்டர் மட்டன் கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி சாதம், சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவியை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்வீர்கள்.

உங்களுக்கு பட்டர் மட்டன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டர் மட்டன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மட்டன் - 1/2 கிலோ
* உப்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 சிட்டிகை
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (அரைத்தது)
* சின்ன வெங்காயம் - 8 (அரைத்தது)
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 2 சிட்டிகை
* கறிவேப்பிலை - 2 கொத்து
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சிறிது
* தண்ணீர் - 1 டம்ளர்
செய்முறை:
* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அந்த மட்டனுடன், 1 டீஸ்பூன் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட்,
மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள்,
வெண்ணெய் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த தக்காளி மற்றும் அரைத்த சின்ன வெங்காயத்தை
சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் மற்றும்
வெண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லியை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு
தூவி, வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து
1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை
மூடி 5 விசில் விட்டு, பின் குறைவான தீயில் வைத்து 2 நிமிடம் வேக
வைத்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான பட்டர் மட்டன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications