Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சுவையான பட்டர் குல்ச்சா செய்வது எப்படி?
இதுவரை நீங்கள் பட்டர் குல்ச்சாவை ஹோட்டல்களில் தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த பட்டர் குல்ச்சாவை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். முக்கியமாக பட்டர் குல்ச்சா செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது.
தினமும் சப்பாத்தி, பூரி செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா? இன்று சற்று வித்தியாசமாக வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் பட்டர் குல்ச்சா செய்து சாப்பிடுங்கள். இதுவரை நீங்கள் பட்டர் குல்ச்சாவை ஹோட்டல்களில் தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த பட்டர் குல்ச்சாவை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். முக்கியமாக பட்டர் குல்ச்சா செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. இந்த பட்டர் குல்ச்சா குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பேச்சுலர்கள் கூட இதை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு பட்டர் குல்ச்சா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பட்டர் குல்ச்சா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பால் - 1/2 கப்
* மைதா - 1 கப் + தேவையான அளவு
* சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
* வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, உப்பு, பேக்கிங் சோடா மற்றும் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் மைதா மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் பிசைந்த மாவை மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு சிறிது மாவை எடுத்து உருட்டி, சப்பாத்தி போன்று தேய்க்க வேண்டும்.
* பின் அதன் மேல் நீரைத் தடவ வேண்டும்.
* பிறகு ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். தவா சூடானதும், தேய்த்து வைத்துள்ள குல்ச்சாவை தவாவில் போட வேண்டும். அப்படி போடும் போது, நீர் தடவிய பக்கம் அடியில் இருக்க வேண்டும்.
* குல்ச்சா சற்று உப்பி வரும் போது, தவாவை எடுத்து, அப்படியே கவிழ்ந்து நெருப்பில் சிறிது நேரம் காட்டி, பின் தவாவை அடுப்பில் வைத்து குல்ச்சாவை திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் மேலே சிறிது வெண்ணெயைத் தடவினால், சுவையான பட்டர் குல்ச்சா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
