Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
மணமணக்கும்.. ருசியான... பட்டர் சிக்கன்
Butter Chicken Recipe: நீங்கள் சிக்கன் பிரியரா? உங்கள் வீட்டில் உள்ளோர் சிக்கனை விரும்பி சாப்பிடுவார்களா? எப்போதும் ஒரே மாதிரி சிக்கனை சமைத்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோர் சிக்கனை வித்தியாசமாக சமைத்து கொடுக்க கேட்கிறார்களா?
அப்படியானால் பட்டர் சிக்கனை செய்து கொடுங்கள். இந்த பட்டர் சிக்கன் சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

இதுவரை பட்டர் சிக்கனை ஹோட்டல்களில் தான் சாப்பிட்டிருந்தால், இன்று அதை வீட்டில் முயற்சி செய்யுங்கள். இந்த பட்டர் சிக்கன் செய்வது மிகவும் சுலபம். உங்களுக்கு பட்டர் சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே பட்டர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* தயிர் - 1/4 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலா செய்வதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* தக்காளி - 6 (அரைத்தது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 2 டீஸ்பூன்
* முந்திரி - 20 (நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* மில்க் க்ரீம் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் கழுவி வைத்துள்ள சிக்கனை எடுத்து, அத்துடன்
தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள்,
கரம் மசாலா, எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஃப்ரிட்ஜ்ஜில் குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* சிக்கன் ஊறியதும், ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பொன்னிறமாக
ப்ரை செய்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், சர்க்கரை மற்றும் உப்பு
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் முந்திரி விழுதை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து 10
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, சிக்கன்
துண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் வைத்து, சிக்கன், 10-15 நிமிடம்
வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதன் மேல் கசூரி மெத்தியை கையால் நசுக்கி தூவி, கரம்
மசாலாவை சேர்த்து கிளறி இறக்கி, மேலே வெண்ணெய் மற்றும் மில்க்
க்ரீம்மை சேர்த்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பட்டர் சிக்கன்
தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications