Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
ப்ராக்கோலியும், முட்டையும் வெச்சு இப்படி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க...
Broccoli Egg Poriyal Recipe In Tamil: உங்களுக்கு ப்ராக்கோலியை எப்படி சமைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும் என்று தெரியாதா? இதனாலேயே ப்ராக்கோலியை வாங்குவதில்லையா? அப்படியானால் அடுத்தமுறை மார்கெட் சென்றால், ப்ராக்கோலியை வாங்கி முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடுங்கள்.
இதனால் சுவை அட்டகாசமாக இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி செய்யும் போது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ப்ராக்கோலி முட்டை பொரியலை சாதத்திற்கு சைடு டிஷ்ஷாகவும் வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அப்படியே கூட சாப்பிடலாம்.

உங்களுக்கு ப்ராக்கோலி முட்டை பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி முட்டை பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ப்ராக்கோலி
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 10 பல் (தட்டிக் கொள்ளவும்)
* இஞ்சி - 1 சிறிய துண்டு (தட்டிக் கொள்ளவும்)
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/4 டம்ளர்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* முட்டை - 3
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ப்ராக்கோலியை துண்டுகளாக்கி, கொதிக்கும் நீரில் போட்டு
சிறிது உப்பு சேர்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டி விட
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ப்ராக்கோலியை சேர்த்து நன்கு 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பின் அதில் தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கிளறி மிளகாய் தூளின் பச்சை வாசனை போக நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மிதமான தீயில் வைத்து
மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* ப்ராக்கோலி நன்கு வெந்ததும், ப்ராக்கோலியை ஓரமாக தள்ளி
வைத்துவிட்டு, நடுவே ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, முட்டைகளை
உடைத்து ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, முட்டை ஓரளவு
வெந்ததும், அதை அப்படியே ப்ராக்கோலியுடன் சேர்த்து நன்கு கிளறி,
கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ப்ராக்கோலி முட்டை பொரியல்
தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications