Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
1 கப் கோதுமை மாவும், ப்ராக்கோலியும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்..
Broccoli Cheese Bites Recipe In Tamil: உங்கள் பிள்ளைகள் மாலை வேளையில் சாப்பிட வித்தியாசமாக ஏதாவது கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவுடன், ப்ராக்கோலி, சீஸ் போன்றவையும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு நாவூறும் சுவையிலான சூப்பரான ப்ராக்கோலி சீஸ் பைட்ஸ் ரெசிபியை செய்யுங்கள்.
இந்த சீஸ் பைட்ஸ் செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இந்த சீஸ் பைட்ஸை ஸ்கூலுக்கும் கொடுத்து அனுப்பலாம். ஒருமுறை இந்த சீஸ் பைட்ஸை செய்தால், பின், அடிக்கடி இந்த சீஸ் பைட்ஸை செய்து கொடுக்குமாறு உங்கள் வீட்டில் உள்ளோர் கேட்பார்கள்.

உங்களுக்கு ப்ராக்கோலி சீஸ் பைட்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி சீஸ் பைட்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
வதக்குவதற்கு...
* ப்ராக்கோலி - சிறிது
* சுடுநீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 3 பல்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மொசரெல்லா சீஸ் - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவை எடுத்து, அதில்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிரட்டி, மூடி வைத்து 1/2
மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு கொதிக்கும் நீரில் ப்ராக்கோலியை துண்டுகளாக்கி சேர்த்து, 2
நிமிடம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை பிளெண்டரில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் மிளகாய் தூள்
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடித்த ப்ராக்கோலியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி, ப்ராக்கோலியை வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய 1 கைப்பிடி மொசரெல்லா சீஸை சேர்த்து நன்கு
வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்த கோதுமை மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி, சப்பாத்தி
போன்று தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதன் மேல் ப்ராக்கோலி கலவையை பரப்பி சுருட்ட வேண்டும்.
* பிறகு கத்தியால் வட்ட துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் துண்டுகளாக்கப்பட்ட ஒவ்வொன்றையும் எடுத்து லேசாக தட்டையாக
தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ளதை போட்டு, முன்னும்
பின்னும் பொன்னிறமாக வேக வைத்து, பின் அவற்றின் மேல் சிறிது சீஸை
வைத்து, 1 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து சீஸ் உருகியதும் அதை
எடுத்தால், சுவையான ப்ராக்கோலி சீஸ் பைட்ஸ் தயார்.



Click it and Unblock the Notifications